அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

FLASH NEWS : +1, +2 பொது தேர்வில் மாற்றம் கொண்டுவரப்பட்டதற்கான அரசாணையை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்

சென்னை: +1, +2 பொது தேர்வில் மாற்றம் கொண்டுவரப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். நடப்பாண்டு முதல் +1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தெரிவித்தார். +1,+2 வகுப்புகளுக்கு 600 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று கூறினார். +2 தேர்வு நேரம் 3 மணி நேரம் 2.30 மணியாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

சென்னை: தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பிளஸ் 1க்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று கூறியுள்ளார். பிளஸ்1, பிளஸ்2 பொதுத்தேர்வு இனி 600 மதிப்பெண்களுக்கு நடத்தப்8படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இரண்டரை மணி நேரத்தில் பொதுத்தேர்வு நடத்தி முடிக்கப்படும் என்றும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சிபிஎஸ்ஈக்கு இணையாக தமிழக பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். 


*📗பாடதிட்டங்கள் மாற்றும்போது ஆசிரியர்களுக்கும் கையேடுகள் வழங்கப்படும்* 

*📗துணைவேந்தர்கள் உள்ளிட்டோரின் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளன*

*📗10, 11, 12 ஆகிய மூன்று வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு*

*📗மாணவர்களுக்கு செய்முறை கையேடுகள் வழங்கப்படும்*


 *📗வகுப்பில் தோல்வியடையும் மாணவர்கள், ஜூன், ஜூலை மாதத்தில் நடைபெறும் இடைத்தேர்வில் எழுதலாம்*
Reactions

Post a Comment

0 Comments